இராமநாதபுரம்: காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்கள் பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் மோப்ப நாய் படைப்பிரிவில், வெடிமருந்து பொருட்களை துப்பறியும் பிரிவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்க்கு ‘எனோலா’ என பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக். அவர்கள் மோப்ப நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியினை பார்வையிட்டார்கள்.