இராமநாதபுரம்: ஜனவரி 1 – ம் தேதியன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி பொதுமக்கள் கடற்கரை , பூங்காக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்று, உருமாறிய கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதாலும் 31.12.2021 – ம் தேதி பிற்பகல் முதல் 02.01.2022 – ம் தேதி காலை வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், இராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், அரியமான், காரங்காடு, நரிப்பையூர், மூக்கையூர், சேதுக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் 50 இடங்களில் வாகனத்தை தணிக்கை செய்வதர்காக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 27 ஆய்வாளர்கள் உட்பட 703 காவல் துறையினர் மற்றும் 140 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மேற்படி அரசின் உத்தரவை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. கார்த்திக், இ.கா.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.