இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில உட்கோட்டம் வாரியாக மாரத்தான் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 06.03.2022-ம் தேதி இராமநாதபுரம் உட்கோட்ட காவல்துறை சார்பில் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கையுந்து போட்டியில் காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை இராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்கள். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசிங் (தலைமையிடம்) அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.