இராமநாதபுரம்: தொண்டி காவல் நிலைய குற்ற எண்: 116/19 u/s 302 IPC @ 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 @ 379, 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 என்ற குற்ற வழக்கின் எதிரிகளான நைனாமுகம்மது, ராஜகுரு ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் 11.10.2019-ம் தேதி மேற்படி எதிரிகளான நைனாமுகம்மது மற்றும் ராஜகுரு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.