இராமநாதபுரம் : இராமநாதபுரம், மண்டபம் அருகே உள்ள மணோலி தீவில் ஆயில் பேரல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மண்டபம் காவல் உதவி ஆய்வாளர் திரு.கணேசமூர்த்தி மற்றும் காவல்துறையினர், மண்டபம் ரோந்து படகு மூலம், மேற்படி தீவிற்கு இன்று சுமார் 1.00 மணிக்கு சென்று சோதனை செய்தபோது, சுமார் 200 லிட்டர் ஆயில்(Gear oil) உடன் இரும்பு பேரல் கைப்பற்றப்பட்டது.
மேற்படி கைப்பற்றப்பட்ட பொருளை மேல் நடவடிக்கைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்