இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இலந்தைக்கோட்டை அருகே நண்பர்களுக்கிடையே, தங்கம் கடத்தல் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் ரகுமான்கான் என்பவரை கடத்தி அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிவக்குமார், முகமது அசாருதீன், இஸ்மாயில் சபீர், யாசின் மற்றும் மருதுபாண்டி ஆகியோரை ஆய்வாளர் திரு.தனபாலன் அவர்கள் u/s 147, 294(b), 342, 323, 365, 506(ii) IPC-ன் கீழ் கைது செய்தார்.
பெண்ணை கேலி செய்தவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் 29.09.2020-ம் தேதி ஒருவர் தன்னை கேலி செய்த கோபால் @ ராஜா என்பவரை கண்டித்ததால், அந்தப் பெண்ணை அவதூறாக பேசி கைகளால் தாக்கிய கோபால் @ ராஜா என்பவரை SI திரு.குமரேசன் அவர்கள் u/s TNWH Act-ன் கீழ் கைது செய்தார்.