இராமநாதபுரம் : அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியவர் கைது. 28.06.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக பொது இடத்தில் மணல் அள்ளிய இராமகிருஷ்ணன் என்பவரை SI திருமதி.சித்ரா தேவி அவர்கள் U/s 379 IPC r/w 21(1) Mines and Minerals Act -ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய இருவர் கைது. 27.06.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகேயுள்ள பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய கபில்தாஸ் மற்றும் சாய்குமார் ஆகிய இருவரையும் SI திரு.கோட்டைச்சாமி அவர்கள் U/s 379 IPC & 21 (1)Mines and minerals regulation Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
தேர்தல் முன்விரோதம் – மோதிக் கொண்ட இரு தரப்பினர் கைது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கணேசமூர்த்தி மற்றும் அழகர்சாமி ஆகிய இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் காயம் ஏற்படுத்தும் வகையில் மோதிக்கொண்டதில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, காளிராஜ், பிரபாகரன், அழகர்சாமி மற்றும் இளங்கோவன் உட்பட ஆறு நபர்களை SI திரு.சக்திவேல் அவர்கள் U/s 147,148, 294(b), 323, 324, 506(ii) IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
உணவகத்தின் உரிமையாளரை தாக்கியவர் கைது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி பகுதியில், பணம் தராமல் உணவு கேட்டு உணவகத்தின் உரிமையாளர் கௌரிசங்கர் என்பவரை கைகளால் தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய பன்னீர்செல்வம், மனோஜ்குமார் ஆகிய இருவரையும் SI திரு.யாசர் மௌலானா அவர்கள் U/s 294(b), 323, 427 IPC-ன் கீழ் கைது செய்தார்.
தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக, மது போதையில் சந்திரன் என்பவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த அவரது மகன் இருளேஸ்வரன் என்பவரை ஆய்வாளர் திருமதி.திலகராணி அவர்கள் U/s 294(b), 302 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்