பணத்தை திருடிய பெண் கைது
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 19.02.2020-ம் தேதி அரசு பேருந்தில் பயணம் செய்த நாகஜோதி என்பவரின் பணத்தை திருடிய சகபயணி அழகம்மாள் என்பவரை SI திரு. குமரேசன் அவர்கள் U/s 379 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய ராக்கு என்பவரை SI திரு. சரவணன் அவர்கள் U/s 379 IPC r/w 21(4) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
இராமநாதபுரம், உச்சிப்புளி காவல் நிலைய குற்ற எண்: 122020 294(b),336, 332, 307 IPC என்ற குற்ற வழக்கின் எதிரி கணேசமூர்த்தி @ கணேசன் 22/20, த/பெ ராமு, வெள்ளமாசிவலசை, நாகாச்சி, இராமநாதபுரம். என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துபிரேம்சந்த் அவர்கள் 19.02.2020-ம் தேதி மேற்படி எதிரி கணேசமூர்த்தி @ கணேசன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்