கிரைம் 1:
இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி பெருநாழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய ரூபாய் 6,000/- மதிப்புள்ள ஒரு ஆட்டை திருடிய செந்தில்குமார் என்பவரை SSI திரு.ராமமூர்த்தி அவர்கள் u/s 379 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
கிரைம் 2:
இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டி ஊரணி அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிய ஆறு பேரை SI திரு.பிரகாஷ் அவர்கள் u/s 12 TNG Act-ன் கீழ் கைது செய்தார்.
கிரைம் 3:
இராமநாதபுரம் மாவட்டம் 14.02.2020-ம் தேதி தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை அளித்த நவாஸ்கான் என்பவரை ஆய்வாளர் திருமதி.கலாராணி அவர்கள் u/s 507 IPC r/w 67 IT Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்