இராமநாதபுரம்: இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.08.2015-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
04.10.2019-ம் தேதி, இவ்வழக்கின் விசாரணை முடிந்து மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.பகவதி அம்மாள் அவர்கள், மேற்படி குற்றவாளி சாத்தையா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.