இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், (21.10.2022)-ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.ஜானி டாம் வர்கீஸ், IAS., இராமநாதபுரம் சரக துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, 54 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.