இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, SIT College மற்றும் பட்டினம்காத்தான் சோதனை சாவடியில் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்து கேணிக்கரை சார்பு ஆய்வளர் திருமதி.கங்காதேவி அவர்கள், மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
கல்லூரி தாளாளர் திரு .ஈஸ்வரன் தலைமை வகித்தார் மற்றும் .கல்லூரி முதல்வர் திருமதி.ரேவதிஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வின் போது அனைத்து துறை மாணவிகள் மற்றும் பயிற்றுனர்கள் திரு.முனியசாமி, செல்வி. கார்த்திகா, திருமதி. ஷியாமளா மற்றும் வாடன் தெய்வானை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்க்கான ஏற்பாடுகளை பயிற்றுனர் ஆப்பநாடு திரு. முனியசாமி செய்திருந்தார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details…
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்