இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் (04.08.2023) பாராட்டு விழா நடைபெற்றது.
இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.சாலமன் ராஜா (ஆற்காடு தாலுக்கா வட்ட காவல் ஆய்வாளர்), திரு.காண்டீபன் (கலவை வட்ட காவல் ஆய்வாளர்), திருமதி. பாரதி (அரக்கோணம் நகர காவல் நிலையம்) உதவி ஆய்வாளர்கள் திரு. மகாராஜன் (வாலாஜா காவல் நிலையம்)திரு. சீனிவாசன் (வாலாஜா காவல் நிலையம்), திரு.தினேஷ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திரு.ரகு (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.லோகநாதன் (ஆற்காடு நகர காவல் நிலையம்),திரு.சுப்பிரமணி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திரு.மதிவாணன் (நெமிலி காவல் நிலையம்),திரு. சதாசிவம் (நெமிலி காவல் நிலையம்), திருமதி.ஜான்சி (அயல் பணி அரக்கோணம் நகர காவல் நிலையம்) தலைமை காவலர்கள் திரு. மாறன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்),திரு.அப்துல் முஜீர் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திருமதி. மீனா (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திருமதி.ஜானகி தேவி (ஆற்காடு தாலுக்கா காவல் நிலையம்),முதல் நிலை காவலர்கள் திரு. கோபிகிருஷ்ணா (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திரு.வெங்கடேசன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), காவலர்கள் திரு. தாமோதரன் (பானாவரம் காவல் நிலையம்), திரு. அமித் பாஷா (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திரு. திவாகர் (அரக்கோணம் நகர காவல் நிலையம்) ஆகியோர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மேலும் இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விசுவேசுவரய்யா (தலைமையிடம்), அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜா சுந்தர் (மாவட்ட குற்றஆவண காப்பகம்), காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்