இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரமாக வாழும் பொதுமக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிளாஸ்டோன் புஷ்பராஜ், IAS அவர்களின் கனிவான வேண்டுகோள். பாலாற்றில் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில, பெய்து வரும் கனமழையின் காரணமாக சுமார் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் பாலாற்றில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இளம் குழந்தைகள் இளைஞர்கள் இளைஞிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேங்கியுள்ள நீரில் மற்றும் ஆற்றில் உள்ள நீர் நிலைகளிலும் குளிக்க செல்லாமலும் வேடிக்கை பார்க்க ஆற்றில் இறங்கிச் செல்லாமல் இருந்து உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ஆற்றங்கரை ஓரத்தில் குடியிருப்போர் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்