இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்த்துறை இயக்குனர் அவர்கள், காவல்த்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் (ம) ஒழுங்கு அவர்கள் மற்றும் காவல்த்துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சென்னை அவர்களின் பேரில் தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கை செய்து மதுவிலக்கு சம்மந்தமாக குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் கடந்த 05.08.2021 ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்டம், கலவை காவல் நிலையம் இரவு ரோந்து கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து போலீசார் திரு. சரவணமூர்த்தி, சார்பு ஆய்வாளர், திரு.மணி, தலைமை காவலர் 135 மற்றும் குமரன் மு.நி.கா 522 ஆகியோர் கலவை-செய்யாறு ரோட்டில் உள்ள கன்னி கோயில் தரைப்பாலம் அருகே இரவு ரோந்து பணியில் இருந்தபோது கிடைத்த நம்பகமான தகவலின் பேரில் கலவையிலிருந்து செய்யாறு நோக்கி வந்து கொண்டிருந்த TN 90 B 2497 Mahindra Bolero Maxi Truck Plus என்ற பிக்அப் வேலை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் மற்றொருவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். மேற்படி வண்டியை சோதனை செய்த போது அதிலிருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 வெள்ளை நிறக் கேன்களில் மொத்தம் 3,500 எரி சாராயம் (Rectified Sprit) தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராணிபேட்டை அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் குற்றவாளி கண்டு பிடிக்கும் பொருட்டு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை, காவல் துணை கண்காணிப்பாளர், இராணிப்பேட்டை உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில் இராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் கலவை காவல் நிலையம் மற்றும் ஐந்து உதவி ஆய்வாளர் தலைமையில் மொத்தம் 7 தனிப்படை அமைத்தும், மத்திய புலனாய்வு பிரிவு (CIU) உதவியுடன் வழக்கின் எதிரி திருவண்ணாமலை செய்யாரை சேர்ந்த சம்பத் என்பவரை பிடித்து விசாரிக்க அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் கலவை அருகே உள்ள செய்யாத்துவண்ணம் கிராமம், பத்மாவதி நகர் என்ற இடத்தில் வெளிமாநிலத்திலிருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 397 (மொத்தம் 397*35=13,895 லிட்டர், 100*35=3,500 லிட்டர்) ஆக மொத்தம் 497 கேன்களில் 17,395 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த தனிப்படை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்ந்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
எரி சாராய கேன்களின் மதிப்பு ரூபாய்- 77,00,000 /- மற்றும் வழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு ரூபாய்- 8,00,000 ஆகமொத்தம் ரூபாய். 85,00,000 லட்சம் ஆகும்.
இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்களை நேரில் அழைத்து காவல் துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை அவர்கள் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்