இராணிப்பேட்டை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பாக கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன், அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்ந அணி வகுப்பில், அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர், தாலுகா காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பினை சிறப்பாக நிகழ்த்தி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்தனர். இதனை அநேக பொதுமக்கள் கண்டு களித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்