தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சேகர் சஞ்சய் ஐபிஎஸ் அவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்,மதுரை ஆறாவது பட்டாலியன் கமெண்ட் ஆகவும்,
2. சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் திருமதி. டாக்டர் தீபா சத்தியன் ஐபிஎஸ் அவர்கள், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாவது பட்டாலியன் மதுரை கமாண்டன்ட் திரு.இளங்கோ சென்னை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல் பாதுகாப்பு படை காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜெயந்தி ஐபிஎஸ், சேலம் சரக அமலாக்கம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சேலம் சரக அமலாக்கம் பிரிவு,காவல் கண்காணிப்பாளர் திரு.டி மகேஷ்குமார், ஐபிஎஸ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் திருமதி. கல்பனா நாயக் ஐபிஎஸ், சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. படிப்பிற்காக விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மொடக் ஐபிஎஸ் அவர்கள், சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.