இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் நெமிலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை நடைபெறும் இடங்களையும், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே நிலையம் மற்றும் சுவால்பேட்டை சீனிவாசன் தெரு ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்கள் நிகழா வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். உடன் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜாபர் சித்திக், பாணாவரம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.நாகேந்திரன் உடன் இருந்தனர்.