இராணிப்பேட்டை : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் மூலம் ஊக்குவித்து கௌரவப்படுத்தி வருகின்றது. அரும்பணி ஆற்றும் காவல்துறையினருக்கு தகுந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதுதானே நாம் செய்கின்ற சரியான பதில்வினையாக இருக்கமுடியும்!
இருளும், ஆபத்தும், வன்முறையும் அமைதியை சீர்குலைக்க முற்படுகையில் நமது உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையே தியாகம் செய்ய தயாராக, அச்சமின்றி களத்தில் இறங்குபவர்கள் நமது காவல்துறை பணியாளர்களே.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யோக லட்சுமி நரசிம்மர் கோயிலிலும் மற்றும் யோகா ஆஞ்சநேயர் கோவிலிலும் டிசம்பர் 24ஆம் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதானத்திற்கு சுமார் 2500 பேருக்கு மேல் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில் நம் காவலர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படிஇநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் ஒளிபரப்பு பிரிவு தென் இந்திய தலைவர் திரு.பாபு அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவலர்களும், பொதுமக்களும் திரு.பாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை சிறப்பாக வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபா சத்யன் தலைமையிலான காவல்துறையினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.