இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு என்கிற அன்பு (42 ). இவர் பாலியல் புகாரில் சிக்கி இராணிப்பேட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாகின் அவர்களால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்ய இராணிப்பேட்டை எஸ் பி. கிரண் ஸ்ருதி, இ.கா.ப ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின்பரில் அன்பரசு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்