விழுப்புரம் : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அனைத்து இடங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
















