திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (16.07.2024) இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (15.07.2024) மன்னார்குடி இரயில் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.