சென்னை : இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் இருப்புப்பாதை காவல்துறை தலைவர் திருமதி.V.வனிதா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் 16.02.2020-ம் தேதியன்று நடைபெற்ற சோதனையில் சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களிலும்¸ இரயில்களிலும் தணிக்கையில் ஈடுபட்டு ஆதரவற்று சுற்றித்திரிந்த 136 ஆண்கள்¸ 16 பெண்கள் என மொத்தம் 152 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முடிவெட்டி¸ முகசவரம் செய்து குளிக்க வைத்து¸ புத்தாடை அணிவித்து¸ உணவு வழங்கி தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைத்தார்கள். அவர்களில் 2 நபர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு நல்ல முறையில் ஒப்படைத்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை