திருவள்ளூர்: சென்னை – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். எண்ணூர் – அத்திப்பட்டு புதுநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை உயரழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக இரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் இரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரயில்கள் எண்ணூர், திருவொற்றியூர் இரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயரழுத்த மின் கம்பியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு