செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே பாதுகாப்பு குழு சார்பாக ஐ.ஜி. அருள்ஜோதி சென்னை கோட்ட இரயில்வே பாதுகாப்பு முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு இரயில்வே காவல் ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்படும் விபத்துக்கள் குறித்து இரயில்வே பாதுகாப்பு சங்கத்தினர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செங்கல்பட்டு இரயில் நிலையம் நடைமேடையில் வைத்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் இரயிலில் பெண்பயணிகள் தங்க நகை அணிந்து ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் அப்படி பயணம் செய்யும்போது எவ்வாறு நகைகளை திருடி செல்வார்கள் என்பதனை நடித்துக் காட்டினர்.
பயணிகள் இரயில் நடைமேடையில் குப்பை போடாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும்படியில் அமர்ந்து பயணம் செய்ய தவிர்க்க வேண்டும் எனவும் ஓடும் இரயிலில் வண்டியில் கற்களை எரிவதால் பயணிகளுக்கு ஏற்படும் விபத்துகள் பற்றியும் மிகவும் அழகாக நடித்து காண்பித்து அதன் மூலம் இரயில் பயணிகளுக்கு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உன்னிகிருஷ்ணன் இரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டனர். இதில் இரயில்வே பாதுகாப்பு காவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்