திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இரயில்வே கேட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் இரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து அமைத்திட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீஞ்சூர் இரயில்வே கேட்.பகுதியை நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அனைவரும் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளின் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவமனை வங்கி உள்ளிட்ட அவசியத் தேவைகள் அனைத்திற்கும் இந்த இரயில்வே கேட்டே கடந்த சென்று வந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அவசரகால வழியை இரயில்வே நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன் எவ்வித மாற்று வழியும் செய்யாமல் அடைத்தது.
இதனால் காலை மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் பல மணி நேர விரயமும் இதனால் பள்ளி குழந்தைகள் கரப்பிணிகள் முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்பப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்திர தீர்வு காணும். வகையில் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் மீஞ்சூர் தனியார். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்க்கூட்டத்திற்கு பேரமைப்பின். தலைவர் ஏ.சி. ராஜேந்திரன். முன்னிலை வகித்தார். செயலாளர். ப.அலெக்சாண்டர் அனைவரையும் வரவேற்றார். இதில் இரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதே ஒன்றே தீர்வு அதற்காக முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து அனைத்து கட்சிகளின் சார்பில் இரயில்வே உயர். அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை துவக்குவது காலதாமதம் ஆனால் அனைத்து கட்சி மற்றும் மக்கள் பிரிதிநிதிகள் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ.கே.சுரேஷ், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், அனஸ், அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் எம். மாரி, வழக்கறிஞர் முகமது அலி காங்கிரஸ் நிர்வாகி அன்பரசு வழக்கறிஞர் துரைவேல்பாண்டியன், வார்டு உறுப்பினர் ஜெயலட்சமி தன்ராஜ், சுகுமார், கம்யுனிஸ்ட். நிர்வாகி கதிர்வேல், இந்திய கம்யுனிஸ்ட் நிர்வாகிகள் பாலன், ஆனந்தன், விசிக நிர்வாகி அபுபக்கர், நெய்த வாயல் ராஜேஷ், வேல்ராஜ், பாபு என்ற அஜிஸ். பாபுலால் , பிஜெபி நிர்வாகி சிவராஜ், மமக நிர்வாகி யுசுப் சாயின்சா முஸ்லீம் லீக் நிர்வாகிகள் காஜா மொய்தின் ஹபிப் மஜித் மஜக நிர்வாகி கமால் பாஷா மக்கள் பிரிதிநிதிகள் கல்பாக்கம் பிரியங்கா துரைராஜ் அதிமுக புதுப்பேடு எழிலரசன், ஜோதி அக்கா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு