பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு.மணிகண்டன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு இரத்தம் தேவைப்படுமாயின் அவர்களுக்கு தேவையான அளவு இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்து கொடுப்பார்.
அந்த வகையில் இன்று 07.08.2021-ம் தேதி மேற்படி காவலர் பணியில் இருந்த போது பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக AB (+) இரத்தம் தேவைப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதன் உண்மை தன்மையை அறிந்து உடனடியாக அந்த பெண்மணியை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியும், பின்னர் இரத்த வங்கி சென்று அந்த பெண்மணியின் பெயரில் தனது குருதியை தானமாக வழங்கினார்.
மேலும் காவலர் மணிகண்டன் இதுவரை 27 முறை இரத்த தானம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பெண்மணிக்கு இரத்த தானம் வழங்கியும் , இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வரும் காவலர் திரு.மணிகண்டனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை