திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமப்பகுதியில் வசிப்பவர் கோபால் வயது 67. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார், இவர் சொந்த வீட்டில் இதே கிராமத்தில் வசித்து வருகிறார்,
நேற்று இவர் தனது மகனை பார்க்க சென்னைக்கு இவர் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார், இன்று காலை இவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக இவரது ஊர்க்காரர்கள், உறவினர்கள், கோபால் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் .
சம்பவ இடத்திற்கு வந்த அவரது வீட்டிற்கு வந்த கோபால் வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை ரூபாய் 13000 பணம் கொள்ளையர்கள் கொள்ளையடித்து உள்ளதாக போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்,
இதேபோல் அருகிலுள்ள சுரேஷ் வயது 40. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர் ஆவார் இவருக்கு இதே ஊரில் சொந்தமாக இரண்டு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு சுரேஷ் தனது மற்றொரு வீட்டில் போய் தூங்கியுள்ளார், இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு பூட்டப்பட்டு இருந்தது இன்று காலை சுரேஷ் இவரது வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த அரை கிலோ வெள்ளி பொருட்கள் , 1.5 சவரன் நகை, ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ஆகிய இரண்டு வீட்டின் கொள்ளை சம்பவங்கள் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் புகாரினை பெற்று வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரித்து வருகிறார்கள்,
ஒரே இரவில், ஒரே ஊரில், ஒரே தெருவில், இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து பீரோ உடைக்கப்பட்டு நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமப்புற பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
மேலும் இது போல் அவ்வப்போது சம்பவங்கள் நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு இந்த பகுதியில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை