தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் (15.01.2023 மற்றும் 16.01.2023) ஆகிய இரண்டு நாட்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 648 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தொடர் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.