கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி பகுதியை சந்திரசாமி (41). டிரைவர் சம்பவம் அன்று அவர் ஜூஜூவாடி பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இரண்டு பேர் சந்திரசாமியிடம் தகராறு செய்துள்ளனர். இது குறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதில் சந்திரசாமியை மிரட்டியது இருதுகோட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (23). ஜூஜூ வாடி சீனிவாஸ் (27). என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்