இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த் கடற்கறையில் உடைமாற்றும் அறையில் இரகசிய Camera மூலம் வீடியோ எடுத்த ராஜேஸ்கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோர் மீது இராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு u/s 77இ 316(2) BNS, r/w 66E IT ACT-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் மேற்படி குற்றவாளியைக் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.