தென்காசி : தென்காசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரின், உறவினர் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி நெகட்டிவ் குரூப் ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது உயிரின் அருமை கருதி ரத்த தானம் செய்த போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளரும், கல்லூரி பேராசிரியர் முனைவர் திரு.ஜோசப் அருண் குமார் அவர்கள் பெரும் முயற்சி செய்து மிகுந்த கருணையோடு மிக விரைவாக இரத்த தானம் கொடுத்து, இரண்டு உயிர்களை காப்பாற்றினார். அவர் காலத்தே செய்த உதவி இரண்டு உயிர்களை காப்பாற்ற பெரும் உதவியாக இருந்ததாக மாணவரின் உறவினர்கள் அவரின் கருணைக்கு நன்றி தெரிவித்தனர்.