தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் பகுதியில், அருகில் அமைந்துள்ள பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 03 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக அதன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. அலெக்ஸ் ராஜ் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோமதி. நாதன் அவர்கள் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி மின் மோட்டார்களை திருடிய மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ரகு குமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் முருகன் (25), ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தார்.