தூத்துக்குடி: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ரயில்வே ஐ.ஜி வனிதா சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி ஆசியம்மாள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட உடல்தகுதி தேர்வு 06.11.2019 முதல் 08.11.2019 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. அதில் 06.11.2019 அன்று நடைபெற்ற முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் கலந்துகொண்ட 950 ஆண் விண்ணப்பதாரர்களில் 658 விண்ணப்பதாரர்களும் 07.11.2019 அன்று நடைபெற்றதில் 938 ஆண் விண்ணப்பதாரர்களில் 638 விண்ணப்பதாரர்களும், 08.11.2019 அன்று நடைபெற்றதில் 753 பெண் விண்ணப்பதாரர்களில் 441 பெண் விண்ணப்பதாரர்களும் ஆக மொத்தம் 1767 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு இன்று முதல் 20.11.2019 வரை நடைபெறுகிறது. இன்றைய திறனாய்வு தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல் மற்றும் 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது.
திறனாய்வு தேர்வில் 688 ஆண் விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்கின்றனர். நாளை நடைபெறவுள்ளதில் 638 ஆண் விண்ணப்பதாரர்களும், 20.11.2019 அன்று நடைபெறவுள்ளதில் 441 பெண் விண்ணப்பதாரர்களும், மொத்தத்தில் முதல் உடல் தகுதித் தேர்வில் தகுதிபெற்ற 1767 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட உடல் திறனாய்வு தேர்வில் கலந்து கொள்கின்றனர்.