பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரண்டை கொலை சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி குற்றவாளிகளில் 1.சந்துரு @ சந்தோஷ்குமார் 30 பெரம்பலூர் . 2.மகேஷ் (22), சென்னை. 3.யுவராஜ் 27) சென்னை. 4.அப்பு @ ஸ்ரீராமகிருஷ்ணன் 23,சென்னை. 5.சத்யா20 செங்கல்பட்டு. என்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
*மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரவீந்திரன் தலைமைக் காவலர்கள் திரு.தயாளன் மற்றும் திருமதி.ரீத்தல் ஆகியோர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை