மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இகா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் சுமார் 240 ஏழை எளிய குடும்பங்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி கிளப் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி. தீபா அவர்கள், ADSP திருமதி.வனிதா அவர்கள், சிலைமான் காவல் ஆய்வாளர் திரு.மாடசாமி ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.
கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி பீ.பீ குளத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு தல்லாகுளம் காவல்நிலையம் சார்பாக அரிசி, கோதுமை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

