சிவகங்கை: இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேளாண் பொறியியல் துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ. சுப்பையா அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயற்கை வேளாண்மை நிபுணர் முனைவர் V.கருப்பு ராஜ் அவர்கள் பங்கேற்று இயற்கை வேளாண்மை மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்தும் பல தகவல்களை வழங்கினார். அவர் பேசுகையில் ” நம் பாரம்பரியத்தின் ஒரு அங்கமான இயற்கை வேளாண்மையை மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
முன்னராக வேளாண் பொறியியல் துறை தலைவர் முனைவர் V. சாரதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். பின்னர் K.C.பழனிவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கி விழாவை துவங்கி வைத்தார் . இந்நிகழ்வில் பல மாணவர்கள் பங்கு பெற்று இயற்கை வேளாண்மை குறித்த பல தகவல்களை தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வின் நிறைவுப் பகுதியாக கல்லூரி முதல்வர் M. சிவகுமார் அவர்களின் அறிவுறுத்துதலின்படி பங்குபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி துணை முதல்வர் V மகாலிங்க சுரேஷ் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி