சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காலத்திலும் சரி, முழு ஊரடங்கு இல்லாத போதிலும், ஏழை எளிய மக்களின் நண்பர்கள் ஆக இருந்து, அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, காவல்துறை உதவியுடன், போலீஸ் நியூஸ் பிளஸ் உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகின்றது.
நியூஸ் மீடியா அசோசியோஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உணவின்றி இருந்த சாலையோர ஏழை எளிய மக்களின் பசி போக்க ருசியான உணவு வழங்கப்பட்டது.
போரூர் பேருந்து நிலையத்தில், உணவின்றி உறங்கிய, ஆதரவு அற்றவர்களுக்கு, கிருமி நாசினி உபயோகப்படுத்தி கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து, சாலைப்பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்கள் 600 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
மேலும், கல்வி உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, திருமண வாழ்வாதார உதவி, போதைக்கு அடிமையானவர்களுக்கு உதவி, மரக்கன்று உதவி, வாழ்வாதார உதவி, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, தினம்தோறும் பறவைகளுக்கு உணவு அளித்து உதவி வருவது இது போன்ற எண்ணற்ற பல நலத்திட்டங்களை தொய்வின்றி நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் அ.சார்லஸ் அவர்கள் பல ஆண்டு காலமாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.
மேலும் சங்கத்தில், உள்ள உறுப்பினர்களையும் மற்றும் தலைவர்களையும் சமூக சேவை செய்ய ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் வழிகாட்டுதலின்படி, சென்னை மாவட்ட தலைவர் திரு.முகமது மூசா அவர்கள் செய்து வருகிறார்.
இயன்றதை செய்வோம் ! ஏழையை சிரிக்க வைப்போம் !
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வார்த்தைகளுக்கு இணங்க இதுபோன்று சமூகப்பணி தொய்வின்றி தொடர்ந்து செய்து வரும் சென்னை மாவட்ட தலைவர் திரு.முகமது மூசா அவர்களை மனதார பாராட்டுகின்றோம்.