பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து, மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் என்னும் கூற்றுக்கு ஏற்ப, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 60 வயதிற்கு மேற்பட்ட 14 முதியவர்களுக்கு உதவித்தொகையாக ரூபாய் 500 அவர்களது பேரக் குழந்தைகளுக்கு கல்வி உதவியாக 3 நோட்டுகள், 3 பென்சில்கள், 2 பேனாக்கள், வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக SRMC காவல் உதவி ஆணையர் திரு.பழனி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காவல் உதவி ஆணையர் திரு.பழனி அவர்கள், பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். அவர் செய்யும் சமூக சேவையினால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் பாராட்டை பெற்று வருகின்றார். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக, கருணை நடவடிக்கைகள் மூலம் ஒன்றாக இணைந்து சமூகத்தை காத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், சிறுவர், சிறுமிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.