சென்னை: சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 23. என்பவர் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான கணக்கு துவங்கி அதில் சித்ராவின் படங்களை ஆபாசமாக பதிவிட்டுள்ளதாக சித்ராவின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
J-6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு, மேற்படி சித்ராவின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை துவக்கி ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த குற்றவாளி ராஜேஷ் 30. திருவான்மியூர் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் ராஜேஷ், பள்ளியில் படிக்கும்போது சித்ரா அறிமுகமாகி பேசி வந்ததும், சமீப காலமாக சித்ராவை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்த நிலையில், சித்ரா ராஜேஷூடன் பேசாமல் தவிர்த்து வந்ததால், ஆத்திரமடைந்த ராஜேஷ், இன்ஸ்டாகிராமில் சித்ரா பெயரில் போலியான கணக்கு துவக்கி சித்ராவின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்