கத்தி முனையில் வழிப்பறி 2 பேர் கைது!
மதுரை : ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் தஸ்தாகீர் மகன் பகீம் (19), அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் என்ற ஸ்ரீ (20), பழனி குமார் (21), இவர்கள் இருவரும் பகீமிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர் .அவர் பணம் தர மறுத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆசிரமடைந்த இருவரும் பகிமின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ 700ஐ பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பகிம் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த வைகை வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்ற ஸ்ரீ , சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் பழனி குமார் (21) இருவரையும் கைது செய்தனர்.
குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர்பலி!
சக்கிமங்கலம் சதையாதி காலனி L.P.K நகரை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் ராமன் (35) இவர் சம்பவத்தன்று குடிபோதையில் மாட்டுத்தாவணி எட்டாவது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ராமனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உ.பி மாநில மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது!
O.M.R ரோடு சின்ன கண்மாய் சண்முகா நகரை சேர்ந்தவர் முருகவேல் (81) இவர் அம்மன் சன்னதியில் விட்ட வாசலில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடித்து வீட்டுக்கு சென்றார். பிறகு மறுநாள் கடையைதிறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. கடைக்குள் சென்று அவர் பார்த்தபோது அங்கு வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து முருகவேல் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் உ.பி.மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் உட்பட நான்கு பேர் என்று தெரியவந்தது .இதைத் தொடர்ந்து உ.பி.மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் இதாக் கிராமம் இர்ஷாத் மகன் சபாஷ் (21), மற்றும் (17) வயது (15) வயது சிறுவர்கள் மூன்று பேர் உள்பட நான்கு பேரை கைது செய்தனர்.
வீடு புகுந்து செல்போன் திருட்டு வாலிபர் கைது!
புது விளாங்குடி இந்திரா நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் திவ்யலட்சுமி (28) சம்பவத்தன்று இவரது மாமியார் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் வீட்டில் வைத்திருந்த செல்போனை திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து திவ்யலட்சுமி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணைக்கு பின் வீடு புகுந்து செல்போன் திருடியது புது விளாங்குடி ராமமூர்த்தி நகர் சக்திவேல் மகன் அருண் பிரதீப் என்று தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்