கொன்னவராயன் சாலையில் உடலில் தீ வைத்து தற்கொலை!
மதுரை : சமயநல்லூர் திருவாளவாய நல்லூரை சேர்ந்தவர் கர்ணன் (50), இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு போதைப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் குடும்பத்துடன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் 2 வது தெருவில் வசித்து வருகிறார் .சம்பவத்தன்று மகன் வீட்டின் வாசல் முன்பாக உடலில் டீசலை ஊத்திக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் கண்ணன், அவர் உடல் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை மலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் அஜித்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கண்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் வாலிபர் தற்கொலை!
அண்ணா நகர் இந்திரா நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் சரவணன் (21), இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தந்தை திருப்பதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதுங்கி இருந்த வாலிபர் கைது!
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன், இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். எம் கே புரம் செட்டியார் தெரு வழியாக அவர் சென்று கொண்டிருந்தார் .அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் பின்புறம் போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார். அவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். அந்த வாலிபரை சோதனை செய்தபோது அவர் நீண்ட வாள் ஒன்றை வைத்திருந்தார். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் வழிப்பறி செய்யும் திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.
மதிச்சியத்தில் வாலிபர் கைது!
மதுரை போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் இளங்கோவன் (36), இவர் தனக்கு சொந்தமான காரை மதிச்சியம் கிழக்கு தெருவில் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த தாசில்தார் நகர் விவேகானந்தர் முதல் தெருவை சேர்ந்த சிவந்தியான் மகன் விஜய் (18) என்ற வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் காரின் பின் கண்ணாடியை தாக்கி உடைத்தார். இந்த சம்பவம் குறித்து இளங்கோவன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரின் கண்ணாடியை உடைத்த வாலிபர் விஜயை கைது செய்தனர்.
கண்மாயில் மூழ்கி பெண் சாவு!
திருப்பாலை முல்லை நகர் கண்ணப்பர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டியன். இவரது மனைவி திலகவதி (42), இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் இவருடைய பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென்று திருப்பாலை கன்மாயில் தண்ணீரில் மூழ்கி திலகவதி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த திருப்பாலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் தண்ணீர் மூழ்கி பலியானாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என்பதுஷ குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோஷ்டி மோதல் ஐந்து பேர் கைது!
பைக்காரா முத்துராமலிங்கபுரம் மெயின் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார், அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் ஆபாசமாகபேசி தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் குறித்து ரஞ்சித்குமார் மனைவி யோகா கொடுத்த புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் ரஞ்சித் குமாரை தாக்கிய சிவமுருகன் (36), பால்பாண்டி (31), சரவணன் (43) ஆகியோரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக அன்னபூர்ணம் என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அவர்கள் ரஞ்சித் குமார் (21),சிவன்ராஜா (21), விஷ்வாஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார், சிவன் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி