மதுரையில் அரசு பஸ் மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு, ஒருவர் கைது
மதுரையில் அரசுபஸ்மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை புதுநத்தம் ரோடு பேங்க்காலனிவழியாக சென்ற அரசு பஸ் பஸ்ஸ்டாப்பில் நின்று கிளம்பியபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென்று பஸ்மீது கல்வீசி தாக்கினார்.இந்த சம்பவத்தில் டிரைவர்சீட் அருகே இருந்த ரியர்வியூ மிரர் உடைந்து சேதமடைந்தது.இதைத்தொடர்ந்து அவரைப்பிடித்து தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கண்டக்டர் முனியாண்டி கொடுத்தபுகாரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் பேங்க்காலனி கோகலே ரோட்டைச்சேர்ந்த ரசாக்40.என்று தெரியவந்தது.
**********
மதுரை கரும்பாலையில் ஒருவருக்கு கத்திகுத்து மற்றொருவர் கைது
மதுரை கரும்பாலையில் கத்திக்குத்து தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி43.இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை முன்பு நின்றபோது அங்கு வந்த கரும்பாலை தெற்குத்தெருவைச்சேர்ந்தமலைச்செல்வம்53.என்பவர் தகாத வார்த்தையால் பேசசிஅவரை கத்தியால் குத்தியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********
மதுரை கூடல்புதூரில்தலைவலி காரணமாக சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை கூடல் புதூரில் தலைவலி காரணமாக சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை விளாங்குடி சந்தோஷ்தெருவை சேர்தவர் செல்வம் மகன் பூபேஸ்குமார்18.இவருக்கு தொடர்ந்து தலைவலி இருந்தது.இதனால் மனமுடைந்து காணப்பண்டார்.இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********
மதுரை அண்ணாநகரில் ஜவுளிக்கடையை உடைத்து கொள்ளை நல்லிரவில் கைவரிசை
மதுரை ஜவுளிக்கடையில் நல்லிரவில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். மதுரை அண்ணாநகர் மூன்றாவது கிழக்கு குறுக்குத்தெருவை சேர்ந்தவர்கோபிநாத்.இவர் இதே முகவரியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.இவர் வழக்கம்போல கடையை மூடிவிட்டு மறுநாள் கடைதிறக்கவந்தார்.அப்போது கடையின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது.கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள ஜவுளிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர்.இந்த கொள்ளை தொடர்பாக கோகுல்நாத் புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
