மதுரை அண்ணாநகரில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் இருத்து ஒருபவுன் நகை பறிப்பு
மதுரை: அண்ணாநகர் எஸ்.எல்.சி .காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி 85.இவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல் வீட்டில் அமர்ந்திருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவர் வீட்டுக்குள் புகுந்தனர்.அவர்கள் மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டு தங்கசங்கிலி ஒன்பது வலையல்கள் மொத்தம் இருபத்தாறு பவுன் நகைகளை பறித்துச்சென்றுவிட்டனர்.இந்த சம்பவம்குறித்து சரஸ்வதி அண்ணாநகர் போலீசில்புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைபறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
மதுரை திருப்பாலையில் நடந்து சென்றபெண்ணிடம் செயின்பறிப்பு, பைக் ஆசாமிகள் கைவரிசை
மதுரை சர்வேயர்காலனி வ.உ.சி.தெருவைச்சேர்ந்தவர் புவனேஸ்வரி 31,இவர் மீனாட்சி அம்மன்நகர் வழியாக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக சென்ற பைக்ஆசாமிகள் புவனேஸ்வரி அணிந்திருந்த இரண்டேகால்பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர்.இது குறித்து புவனேஸ்வரி கொடுத்தபுகாரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.விசாரணையில் அண்ணாநகரில் வீடுபுகுந்து நகைபறித்த ஆசாமிகள் சென்ற வாகனமும் சர்வேயர் காலனியில் நகைபறித்த ஆசாமிகளும் சென்ற வாகனம் ஒன்றுதான் என்பதும் ஒரே நபர்கள்தான் என்று தெரியவந்தது.அவர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
மதுரை தல்லாகுளத்தில் கத்திமுனையில் வழிப்பறி, வாலிபர் கைது
மதுரை கடச்சனேந்தல் எல.கே.டி.நகரைச் சேர்ந்தவர் பூமிநாநன்45. இவர் பீ.பி.குளம் சந்திப்பில் நடந்து சென்றபோது அவரை கத்திமுனையில் மிரட்டி ரூபாய் நானூரை வாலிபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக பூமிநாதன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேலமடையைச்சேர்ந்த சரவணன் என்ற மாட்டுசரவணன்24 என்பவரை கைது செய்தனர்.
மதுரை தல்லாகுளத்தில் கற்பிணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை, காரணம் என்ன போலீஸ் விசாரணை
மதுரை சின்ன சொக்கிகுளம் எச்.ஏ.கே.ரோடுவைச்சேர்ந்தவர் பாஸ்கர்மனைவி அனிதா26.இவர் மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தார்.இவர் திடீரென்று வீட்டில் சீலிங்பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது குறித்து தல்லாகுளம்போலீசார் வழக்குப்பதிவுசெய்து தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரித்து வருகின்றனர்.
