மதுரை மாட்டுத்தாவணி அருகே கேரள லாட்டரி யுடன் ஒருவர் கைது பணம் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கேரளா லாட்டரியுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்லூர் மெயின் ரோடு பூந்தமல்லி நகரை சேர்ந்த செந்தில்முருகன் 52 என்பது தெரியவந்தது .அவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த போது பிடிபட்டார்.அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் ரூபாய் ஆயிரத்தையும் மாட்டுத்தாவணி போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
***********
மதுரை மேல அணுப்பானடியில் வீட்டை உடைத்து 1லட்சம் பணம் பைக் நகை கொள்ளை
மதரை மேல அனுப்பானடியில் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். மேல அனுப்பானடி கண்மாய்க்கரை ரோடு ஜே.ஜே.நகரைச்சேர்ந்தவர் செந்தில்42.இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.அவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஒன்றேகால் பவுன் தங்க நகை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றைமர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.இது குறித்து செந்தில் புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
**********
மதுரை கூடல்புதூரில் வாலிபரிடம் நகை பணம் பறித்த சஸ்பெண்ட் போலீஸ். ஆறுபேர் கைது
மதுரை கூடல் புதூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தி போலீஸ் உடையில் சென்று பணம் நகை பறித்த சஸ்பெண்ட்போலீஸ்,மூன்று பெண்கள் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை சங்கு முத்துமாரியம்மன் நகரைச்சேர்ந்தவர் சரத்பாபு 34.இவர் மதுரை வந்திருந்தார் .கூடல் நகர் பகுதியில் இவர் சென்ற போது இவரை மூன்று பெண்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர்.அப்போது போலீஸ் உடையில் வப்த நபர்கள் அவரை மிரட்டி அவரிடமிருந்து ஒன்றேமுக்கால் பவுன் தங்க நகையையும் ரூபாய் இரண்டாயிரத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். அவர்கள் பொய்போலீஸ் என்று பின்னர்தான் சரத்பாபுவுக்கு தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து அவர்கொடுத்தபுகாரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொய்போலீசான மேலூர் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த மச்சராஜா32,மேலூர் கச்சிராயன்பட்டி ராஜபிரபு 34,தினகரன் ஆகியோரை கைது செய்தனர்.மற்றும் கூடல் நகர் கருப்பாயி 71,தெய்வாணை 46,தவமணி 27,ஆகியோரையும் கைது செய்தனர்.இவர்களில் ராஜபிரபு சிவகங்கை மாவட்ட காவல்துறையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர்.
********