பேக்கரி முன்பு நினறு ஆபாச பேச்சு 2 வாலிபர்கள் கைது
மதுரை : மதுரை நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் காளியப்பன் (36). இவர் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி முஸ்லிம் பேட்டையில் பேக்கரி நடத்திவருகிறார். பேக்கரி முன்பாக இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .அப்போது அவர்கள் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை கடை உரிமையாளர் தட்டி கேட்டார். இதனால் ஆச்சிரமடைந்த இரண்டு வாலிபர்களும் கடை உரிமையாளர் காளியப்பனை தரகுறைவாக பேசி கடை மீது தாக்குதல் நடத்தி சூரையாடினர். இந்த சம்பவம் குறித்து காளியப்பன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (24),அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி மகன் விமல் (21) ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.
தனியார் மருத்துவமனை விடுதியில் ஊழியர் திடீர்சாவு!
கன்னியாகுமரி மாவட்டம் கப்பி யாரை ,கூவரவிளை ஊரைச் சேர்ந்தவர் டேவிட் ராமதாஸ் மகன் ஹரி விக்னேஷ் (21), இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்டாப் ஹாஸ்டலில் தங்கி வந்தார். இந்த நிலையில் அதிகாலை அவர் திடீரென்று தங்கி இருந்த அறையில் இறந்து கிடந்தார். இந்த தகவல் மாட்டுத்தாவணி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபர் ஹரி விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய உறவினர் லக்ஷ்மணதாஸ் கொடுத்த புகாரில் மாட்டுத்தாவனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் லக்ஷ்மனதாசின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணியில் வீடு புகுந்து தாக்குதல் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது
சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் விஜயன் மனைவி பஞ்சவர்ணம் (20) இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் விஜிபாண்டியன் (27) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் அத்து மீறி வீடுபுகுந்த இவர் பஞ்சவர்ணத்தை ஆபிசமாக பேசினார். வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து சூறையாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பஞ்சவர்ணம் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீடுபுகுந்து தாக்கிய விஜிபாண்டியனை கைது செய்தனர்.
வீட்டு வாசல் முன்பு பன்றி தலை வீச்சு மர்ம ஆசாமி குறித்து போலீஸ் விசாரணை
விராட்டிபத்து முல்வைநகய் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கணேசன் (48), இவர் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புபன்றித்தலை கிடந்தது.யாரோ மர்ம ஆசாமி வேண்டுமென்றே வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இந்தச் சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் முன்பு வாசலில் பன்றித்தலை வீசிய ஆசாமி யார் என்று தேடி வருகின்றனர்.
சொக்கி குளத்தில் சிறுவன் உட்பட ஒன்பது வாலிபர்கள் கைது
சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோட்டில் நடு ரோட்டில் வாலிபர்கள் சிலர் ஆபத்தானமுறையில் பைக் ஓட்டிக்கொண்டிருந்தனர்.அவர்கள்பைக்கின் முன்சக்கரத்தை மேல தூக்கி வீல் சேசிங் செய்து கொண்டிருந்தனர்.இதனால் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவர்கள் நடந்து கொண்டதால் இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஆதிகுந்தகண்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்குச்சென்றார். அவர் அங்கு பைக்சேசிங்செய்த சிறுவன் உள்பட ஒன்பது வாலிபர்களைபிடித்தார். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது நரிமேடு ஜீவாக்குறுக்குத் தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21),நரிமேடு குதிரை பாலம் ஜீவா தெரு செந்தில்குமார்மகன் மனோஜ் 19, மற்றும் (17) வயது சிறுவன் உள்பட 9பேர் என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வாலிபரை கல்லால் தாக்கி செல்போன் பறிப்பு 2 பேர் கைது
சேலம் மாவட்டம் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (42), இவர் திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் 2வது தெருவில் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவில் பின்புறமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் அவரை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் செல் போன் பறித்த திருநகர் பாலாஜி நகர் சுதாகரன் மகன் கவிகரன் (24), மதுரை கீழத்தெரு மாரிமுத்து மகன் செந்தூர்பாண்டி (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி