உரிய ஆவணம் இன்றி மங்கலத்தில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாமல் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த முகம்மது உசேன் (33) மற்றும் முகமது மொட்லிப் (26) மற்றும் அஷ்ரஃபுள் (20)மற்றும் சையது உள்ளா இஸ்மாயில்( 24)மற்றும் பர்கத் உசேன் (27)ஆகிய ஐந்து நபர்களை மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் விசாரணை செய்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,
ஆடு மாடு திருடிய வழக்கில் ஒருவர் கைது
காங்கேயம் அருகே ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய பாளையம் பகுதியில் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மற்றும் பொன்னாபுரம் பகுதியில் பேபி என்ற நபருக்கு சொந்தமான 5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாட்டுக் கிடாயை ஒன்றை திருடி சென்ற வழக்கில் செந்தில் என்கிற அருணாச்சலம் என்ற நபரை ஊத்துக்குளி காவல்துறையினர் கைது
செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 வயது சிறுமி 9 மாதம் கர்ப்பம் பாலியல் வன்முறை ஒருவன் கைது?
காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்துக்குளி செம்மாண்டம் பாளையம் பகுதியில் வசித்து வந்த சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவன் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மது விற்பனை செய்த 8 பேர் மீது வழக்கு
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் அவர்களின் உத்தரவுப்படி மது, கள்ள சாராயம் ,மற்றும் கள்விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் முடுக்கி விடப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் 19. 8. 2011 அன்று மாவட்டம் முழுவதும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் 43 தமிழ்நாடு மது பாட்டில்களும் ஆயிரத்து 600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
உடுமலைப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரவணா மில் மற்றும் எஸ் வி புரம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 960 கிராம் எடையுள்ள 96 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
காங்கேயத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் பகுதியில் அமல் ராஜ் என்பவர் சொந்த வேலை காரணமாக மளிகைக்கடைக்கு வந்து வண்டியை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது தன்னுடைய பைக்கை முகம் தெரியாத ஒரு நபர் திருடிக் கொண்டு சென்றதை பார்த்து சத்தம் போட்டுள்ளார் உடனே அங்கிருந்து தமிழ் ராஜன் என்ற நண்பரோடு உடனடியாக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த நபரை துரத்தி கொண்டு சென்று திருப்பூர் சாலை வாய்க்கால் மேட்டில் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் வந்து புகார் கொடுத்ததின் பேரில் சரவணன் என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.