சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 2 நபர்கள் சென்னை பெருநகர காவலின் மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கோடம்பாக்கத்தில் செல்போன் பறிக்க முயன்ற துரைராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் R-2 கோடம்பாக்கம் காவல் குழுவினரால் கைது. 4 கிராம் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
சைதாப்பேட்டை பகுதியில் நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற கண்ணன் என்பவர் J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினரால் கைது
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
