மனைவி கொலை, மரண தண்டனை தீர்ப்பு
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், 16.02.2012ல் அவரது மனைவி மோனாம்பாளை கொலை செய்த வழக்கில், கண்ணனுக்கு மரண தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் 03.03.2021 அன்று தீர்ப்பு வழங்கியது.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன், வ/41, என்பவர் அவரது மனைவி மோகனாம்பாள், பெ/வ.35 இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், 16.12.2012 அன்று கண்ணன், வீட்டிலிருந்த உரல் கல்லை மனைவி மோகனாம்பாள் மீது போட்டும், கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தொடர்பாக, V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு கண்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், V-5 திருமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, விசாரணை முடிவடைந்து 03.03.2021 அன்று கண்ணன் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி கண்ணனுக்கு மரண தண்டனை விதித்து கனம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த V-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
மயிலாப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரஷீத்(சாலிகிராமம்) என்பவர் E-1 மயிலாப்பூர் காவல் குழுவினரால் கைது.22.5 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் 1 எடை இயந்திரம் கைப்பற்றப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக,E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், 04.03.2021 அன்று காலை, மயிலாப்பூர், நொச்சி நகர், ‘B’ பிளாக் அருகில் கண்காணித்தபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ரஷீத், வ/35, சாலிகிராமம், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 22.5 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் 1 எடை இயந்திரம் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீலாங்கரை பகுதியில் பூவிழி என்பவரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற ஐயப்பன் (சின்னா நீலாங்கரை) என்பவர், J – 8 நீலாங்கரை காவல் குழுவினரால் கைது .1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
சென்னை , கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூவிழி , பெ / வ .27 என்பவர் 03.3.2021 அன்று காலை கொட்டிவாக்கம் , சாமிநாதன் நகர் 4 வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது , இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பூவிழியின் கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை பறிக்க முற்பட்டபோது , பூவிழி சத்தம் போடவே , பொதுமக்கள் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை இருசக்கர வாகனத்துடன் பிடித்து , காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். J – 8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று , இருசக்கர வாகனத்தில் சென்று பூவிழியின் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற ஐயப்பன் , வ / 27 , சின்னா நீலாங்கரை , என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு,அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் அட்வகேட் ஜெனரலை ஏமாற்றியவருக்கு 5 மாதம் சிறை
கடந்த 04.09.2020 ம் தேதி சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான திரு . P.S. ராமன் என்பவர் கொடுத்த புகாரில் அடையாளம் தெரியாத நபர் தன்னை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டதாகவும் , அதில் அந்த நபர் தான் ஒரு வழக்கறிஞர் என்றும் , உச்சநீதமன்ற நீதியரசர் அவர்களின் மகன் என்றும் தெரிவித்து , தான் சென்னைக்கு அலுவல் சம்மந்தமாக வந்திருப்பதாகவும் , தன்னுடைய செலவுக்காக ரூ .20,000 / – தரும்படி கேட்டதாகவும் , தான் டெல்லி சென்றவுடன் திருப்பித் தந்து விடுவதாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் , அதை உண்மை என்று நம்பிய புகார்தாரரும் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது வாட்ஸ்ஆப்பில் பேசிய நபர் போலியான நபர் என்பதை அறிந்து அவர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றபிரிவு கணிணிவழி குற்றபிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது . புலன்விசாரணையில் புகார்தாரரை ஏமாற்றிய நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 54 வயதான திரு . அப்ரஜித் பசாக் என்பதும் , அவர் உச்சநீதிமன்ற நீதியரசர் மகன் போன்று ஆள்மாறாட்டம் செய்து புகார்தாரரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்ததின் பேரில் கடந்த 05.09.2020 ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் .
இவ்வழக்கில் புலன் விசாரணையின் போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தினத்திலிருந்து 45 நாட்களுக்குள்ளாக இறுதி அறிக்கை கனம் எழும்பூர் குற்றவியல் நடுவர் ( CCB & CBCID வழக்குகள் ) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையில் , அரசுதரப்பு கூடுதல் பொது வழக்கறிஞர் உயர்திரு. செல்வராஜ் அவர்கள் திறமையாக வாதட்ட காரணத்தினால் எதிரி திரு . அப்ரஜித் பசாக் என்பவருக்கு தகவல் தொழில் நுட்ப திருத்தச் சட்டம் பிரிவு 66D உ/இ . 84C ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தது நிரூபணம் ஆன காரணத்தினால் , கனம் எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் ( CCB & CBCID வழக்குகள் ) அவர்கள நேற்று 03.03.2021 ம் தேதி எதிரி திரு . அப்ரஜித் பசாக் என்பவருக்கு 5 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது . குறிப்பு : இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள்ளாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 6 மாத காலத்திற்குள்ளாக எதிரிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
பழைய குற்றவாளி ராஜமங்கலம் காவல் குழுவினரால் குண்டர்தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு,தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட விக்னேஷ் ( எ ) விக்கி ( எ ) மாசி ( எ ) அமாவாசை , என்பவர் மீது V – 4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய V – 4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள், குற்றவாளி விக்னேஷ் ( எ ) விக்கி என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின்பேரில், குற்றவாளி விக்னேஷ் ( எ ) விக்கி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். குற்றவாளி விக்னேஷ் ( எ ) விக்கி மீது V – 4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்