குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை
பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில் குடியிருப்பவர் திருமேனி. திருமேனி தனது வீட்டின் பின்புறம் குப்பைகளை அதிகளவில் குவித்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்தராஜ் பலமுறை எடுத்துக் கூறியும் அந்த குப்பைகளை அகற்ற வில்லை. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் ஆனந்தராஜ் திருமேனியிடம் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திருமேனி மற்றும் அவரது நண்பர்கள் ரவி, செந்தில் ஆகியோர் ஆனந்தராஜ் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர். தொடர்ந்து ஆனந்தராஜின் தாயாரிடம் தகராறு செய்ததோடு அங்கிருந்த உருட்டுக்கட்டையால் அவரை தாக்கினர். இதில் ஆனந்தராஜின் தாயாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே குடிபோதையில் பைக் ஓட்டிச் சென்றவர் கீழே விழுந்து சாவு
கோவை, சூலூர் மணியம் ராமசாமி தேவர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55) கூலி தொழிலாளி . இவர் குடிபோதையில் கோவை திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடிரென்று நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் செய்யப்பட்டிருந்தார் இங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று இரவு இறந்தார் இதுகுறித்து அவரது மகன் சிவசங்கர் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேம்பால கட்டுமான பொருட்கள் திருட்டு
கோவை, ராமநாதபுரம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களை அதே பகுதியில் வைத்திருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேம்பால கட்டுமான பணிக்காக வைத்திருந்த உபகரணங்கள் காணவில்லை என கட்டுமான நிறுவனம் சார்பில் போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை திருடிச் சென்ற அவர்களை போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்